2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

‘சரத் பொன்சேகா, ஷவேந்திரவின் பயணத்தடை மதிப்பாய்வு’

Gavitha   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத்தடை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக, இலங்கைக்கு ஒருநாள் பயணத்தை மேற்கொண்டு வருகை தந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மாலைதீவுகளுக்குச் செல்வதற்காக, இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து வெளியேறினார்.

இவர், இன்று (28) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்றார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் இரண்டு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை, நீதித்துறை செயல்முறையாகும் என்றும் இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, சில நேரம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனநாயக, அமைதியான, வளமான, முழு இறையாண்மை கொண்ட இலங்கையுடன், தங்களது கூட்டாட்சியை வலுப்படுத்த, அமெரிக்க முயல்வதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .