Editorial / 2021 மார்ச் 02 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறான நான்கு வழக்குகளுடன் தொடர்புடைய 64 பேரும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு காணொளி மூலம் நேற்று (01) அழைக்கப்பட்டது. இதன்போதே, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா போன்ற இடங்களில் வைத்து அளிக்கப்பட்ட பயிற்சிகளிலும் ஈடுபட்டிருந்துள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்ட சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 58 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்த 58 பேருடன், குண்டுத்தாக்குதல் தொடர்பாக, வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட சஹ்ரானின் சகோதரியும் அவரின் கணவரும் சியோன் தேவாலய தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுத்தாரிக்கு பிரயாணம் செய்ய பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்குஇ நேற்று (01) அழைக்கப்பட்ட போது, ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஐவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
ஏனைய 64 பேரும் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன்இ கொரோனா வைரஸ் காரணமாகஇ அழைத்து வரமுடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்தேஇ காணொளி மூலமாக அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
29 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
48 minute ago