Editorial / 2020 நவம்பர் 24 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி வழங்கும் வாக்மூலங்கள் அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, திடீரென அவர் இறந்துவிட்டால் என்னச் செய்வது எனக் கேள்வியெழுப்பினார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா, இந்தியாவுக்குத் தப்பியோடியிருக்கின்றார். அவரை நாட்டுக்குள் அழைத்து வர வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டம் மீதான நேற்றைய, குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி வழங்கும் வாக்குமூலங்கள் அனைத்து ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை அவர் உயிரிழந்தால் அவர் வழங்கும் தகவல்கள் அனைத்தும் மூடி மறைக்கப்படும்” என்றார்.
57 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago