2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

செட்டிகுளம் இராமநாதன் நிவாரண கிராமத்தில் தீ; 2 மாத குழந்தை பலி

Super User   / 2010 மே 20 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இடம்பெயர்ந்த ஒரு குடும்பம் தங்கியிருந்த கூடாரத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்படி கூடாரம் தீப்பிடித்த வேளையில், குறித்த குழந்தையின் தாய் கூடாரத்தை வெளியேறியபோது குழந்தையை படுக்கையில் கைவிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த குழந்தை தீக்குள் அகப்பட்டு உயிரிழந்ததாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X