2026 ஜனவரி 31, சனிக்கிழமை

’சோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாதிப்பு’

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம்,  சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த உடன்படிக்கையால். நாட்டுக்கு பாரியளவில் பாதிப்பே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X