2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஜோன்ஸ்டனின் கோரிக்கை மனு நிராகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் கோரிக்கை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தனது வழக்கு நிறைவடையும் வரை தன்னை விளக்கமறிலில் வைப்பதற்கு, குருநாகல் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அதிகாரமற்றதாக மாற்றுமாறு கோரி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தாக்கல் செய்த  மறுபரிசீலனை மனு இன்றைய தினம் (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் த சில்வா, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவரது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--