2020 மே 29, வெள்ளிக்கிழமை

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

Editorial   / 2019 மே 15 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவ சிங்களே தேசிய அமைப்பின் பணிப்பாளர் டான் பிரியசாத் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

5 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X