2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

‘துணை கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்’

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாவதற்கான அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த சில  பிரதேசங்களில் தற்போது மீண்டும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு
வருவதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு மாநகர சபைக்குரிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதால், அங்குக் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளப் பிரதேசங்களில் தாமதிக்காது பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .