2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தபாலில் வந்த போதையுடன் பெண் கைது

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை போதைமாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெதம்படமைன் எனப்படும் ஒரு வகை போதைப் பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து, தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் இதனைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த பெண்ணொருவரே சுங்க திணைக்களத்தின் போதை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரின் பெயருக்கு, 4,048 போதை மாத்திரைகள் பொதியிடப்பட்டு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .