2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

தேர்தலை ஒத்திவைக்குமாறு பிக்குகள் முன்னணி கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும், தேசிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தங்காலையில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த குறித்த முன்னணியின் தலைவர் வண.ஹந்துகல ரத்தணபால, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தை விட, தற்போது நாட்டின் நிலை முற்றாக மாறிவிட்டது என்றும் நாடு, ஆபத்தான நிலையில் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாடு, கொரோனா வைரஸ் ஆபத்தில் இருக்கும் போது, அது முற்றாக அகற்றப்படாமல், பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயிப்பது, இந்த ஆபத்தை வேகப்படுத்துகின்றது என்றும் எவ்வாறாயினும், பொதுத் தேவை நடத்தவும் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் மலிவான அரசியல் இலாபம் தேடுவதற்குமே, அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, கொரோனா அச்சுறுத்தில் இருந்து, நாட்டை முற்றாக பாதுகாக்க வேண்டும் என்பதே, தங்களது முன்னணியின் முதலாவது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றம் இயங்காமல் உள்ளது. தேர்தல்கள் ஆணையகத்தால், தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டில் கடுமையான நெருக்கடியை உண்டாக்குவதோடு, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றது. எனவே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு, நாங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X