2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘தேர்தலை நடத்தாமல் ஆளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை’

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், தொடர்ச்சியாகப் பிற்போடும் செயற்பாடுகளை முன்னெடுக்க, அரசாங்கத்துக்கு முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, மாகாண சபைத் தேர்தல், அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாகும். ஆகையால், தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு, தொடர்ந்து கருத்துரைத்த அவர், “மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகளுக்குப் பதிலாக, ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற ரீதியில், ஆளுநரைப் பயன்படுத்தி மாகாண சபைகளை நிர்வகிக்க எடுக்கும் முயற்சிகள், அரசியலமைப்புக்கு முரணானது” என்றார்.

அரசியலமைப்பில் மக்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டுமென, ஏதாவது ஒரு விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், தமது பிரதிநிதிகள் ஊடாக மாகாண சபைகளை நிர்வகிக்கும் உரிமை, மக்களுக்கே உண்டு எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு எந்தவொரு விதத்திலும் அரசியலமைப்பு ஊடாகத் தொடர்ச்சியாக ஆளுநர்களைப் பயன்படுத்தி, மாகாண சபைகளை நிர்வகிக்கத் தனியான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றார்.

 அவசர நேரங்களில் இவ்வாறு செய்யலாம். ஆனால், தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. எனவே, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X