S.Sekar / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி மேலும் அறிவித்திருந்தது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர்கள் கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கியிருந்த கால எல்லையை நீடிப்பதற்கு இந்தியா தீர்மானிக்கவில்லை எனவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையை மீறியிருந்தமை காரணமாக, இந்த தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருந்ததாக இராஜதந்திர மூலங்களை மேற்கொள்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago