Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்குள் வேலைவாய்ப்புக்கள் அற்றுப்போகும் ஆரம்ப கட்டத்திலேயே நாம் உள்ளோமென சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங், இந்நிலைமை மேலும் உக்கிரமடையக்ககூடுமெனவும் எச்சரித்தார்.
அரசியலுக்குள் இளைஞர்களை உள்வாங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல நாட்டிலுள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ள வேண்டுமெனவும், நாடாளுமன்ற அமர்வுகளை ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்ப ஆரம்பித்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தை மீது இளைஞர்களுக்கு வெறுப்பு வந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
அதனால் இளைஞர்கள் தற்போது அரசியலுக்குள் ஈர்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் தியவன்னா ஓயாவுக்குள் இட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இளைஞர்கள் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, தற்போது இலங்கையில் தொழில்வாய்யுக்கள் அற்றுபோகும் நிலையின் ஆரம்ப கட்டத்தையே கடந்துகொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்த இவர், இந்நிலை மேலும் உக்கிரமடையலாம் என்றார்.
இலங்கையை மீட்டெடுக்க 600 டொலர் பில்லியன்கள் அவசியமெனவும், ஆளும் தரப்பினரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
அதனை சிலர் டீல் என சுட்க்காட்டினாலும், எதிர்காலத்தை பலப்படுத்திகொள்வதற்காக அவசியமாக நீண்டகால, இடைக்கால கொள்கைகயை உருவாக்கிகொள்ள வேண்டும் என்றார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago