2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நண்பர்களுடன் சென்ற இளைஞர் மாயம்

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - நாரங்கல மலைத் தொடரில் நண்பர்கள் 6 பேருடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா என்பர இளைஞரே காணாமல்போயுள்ளார்.

இரவு 9.30 மணியளவில் மலசலக்கூடத்துக்கு சென்று வருவதாகக் கூறி சென்ற குறித்த இளைஞர் திரும்ப வரவில்லை என பொலிஸாரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல்போயுள்ள இளைஞரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .