Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலுவில் இந்த ஆண்டின் புதிய வரவாக வந்துள்ள ஜெயலலிதா பொம்மைக்கு டுவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து அரசு திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறு என்றும் இது தவறான முன்னுதாரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் அன்பழகன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர் கே.பாலு ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அரசாங்கம் பதில்
இந்த வழக்கில் பதிலளித்த அரசாங்கம், அரச அலுவலகங்களில், ஜெயலலிதாவின் படம் வைத்திருப்பது, அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு எதிரானது அல்ல. அரசு திட்டங்கள், ‘அம்மா’ என்ற பெயரில் உள்ளன. அம்மா என்பது பொதுப் பெயர். ஒரு மாநிலத்தில், மூன்று முறைக்கு மேல் முதல்வராக இருந்த ஒருவரின் படத்தை, அரசு அலுவலகங்களில் ஏன் வைக்கக் கூடாது. அதுவும், அரசு உத்தரவுப்படியே, முன்னாள் முதல்வரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இதில், எந்த விதிமீறலும் இல்லை என்றும் கூறியது. இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
புதுவரவு ஜெ. கொலு பொம்மை
இந்நிலையில், இந்த ஆண்டின் புது வரவு என்று ஜெயலலிதாவின் கொலு பொம்மையை ஒருவர் பதிவிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மை, முழுஉருவ பொம்மை என இரண்டு வகையில் இந்த ஆண்டு கொலுவுக்கு பொம்மை விற்பனைக்கு வந்திருப்பது தொடர்பில் டுவிட் செய்துள்ளார்.
வரவேற்பு
கொலுவில் ஜெயலலிதாவின் பொம்மைக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது. ஜெயலலிதாவின் கொலு பொம்மையை வரவேற்பதாக மற்றொருவர் டுவிட் செய்து, பொம்மைகளுக்கு பின்னான அற்புதக்கதைகள் இப்படிதானிருக்கும் என்பதை இதைவிட எளிமையாக எப்படி விளக்கிவிட முடியும்? என்றும் கேட்டுள்ளார்.
குற்றவாளி எப்படி கடவுள்?
ஆனால், சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை எப்படி கடவுளாக்குவது என்று எதிர்ப்பும் வலுக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உயிரிழந்ததால் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago