2020 மார்ச் 30, திங்கட்கிழமை

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள பகுதிகள்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் வட மாகாணம் ஆகியவற்றைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை (26) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

மதியம் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக மக்களும், வர்த்தகர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லஅனுமதிக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .