2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நாளை பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாசாலையில் மாபெரும் கண்காட்சி

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாசாலை ஏற்பாடு செய்துள்ள அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரீகத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

நான்கு பிரதான பிரிவுகளை கொண்ட இக்கண்காட்சியில், இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி பேராகிய துருக்கிய உஸ்மானிய பேரின் வரலாற்று சின்னங்கள் மற்றும் ஈரானிய புராதன கலை, கலாச்சர சின்னங்களை காட்சிப்படுத்தும் விஷேட காட்சிக்கூடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள் என 50,000 மேற்பட்டேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கண்காட்சியை காலை 8 மணி முதல் இரவு 8 மணி கண்டுகளிக்கலாம் என ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இறுதி நாள் பெண்களுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தினத்தில் எக்காரணம் கொண்டு ஆண்கள் கண்காட்சி வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)


  Comments - 0

  • tamilsalafi Sunday, 13 June 2010 05:34 AM

    உம்மத்திற்கு எமது எச்சரிக்கையும் உபதேசமும் : >>>

    அல்லாஹ் ஸுபஹான்வஹுதஆலா அல் குர் ஆனை இறக்கியது நன்மையையும் தீமையையும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து காட்டவே..
    நேர் வழியை காட்டவே. எக்ஸிபிசன் காட்டுவதற்கு அல்ல... மேலும் அறிவியல் கண்காட்சி மூலம் இஸ்லாம் நிலை நாட்டப்படவும் இ‌ல்லை.. இஸ்லாத்தை நிலை நாட்டும் வழிமுறையும் இ‌துவல்லை. இஸ்லாத்தை போதிக்க, பரப்ப, எத்திவைக்க, பின்பற்ற, அறிமுகபடுத்த, நடைமுறைபடுத்த அல்லாஹ்வும் அவனது தூதரும் வ‌ழிகாட்டாமல் இ‌ல்லை. அல்லாஹ் அவனது தூதர்களை அனுப்பியதே வழிகாடவே அன்றி வேறில்லை....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--