2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் முஸ்தபாவுக்கு உத்தரவு

Super User   / 2010 மே 31 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவை ஜுலை 12ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விஜேசுந்தர இன்று உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் முஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபா வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா சுகவீனம் காரணமாக லெபனானில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மீதான இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X