2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் ​தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள் பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், பதுர் பாபா பவுண்டேஷன் அனுசரணையில் நடைபெறவுள்ளன. 

இதன்படி, 11 பாடசாலைகளை உள்ளடக்கிய 250 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்று இம்மாதம் 27ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)  பதுளை பாரதி கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் 7 பாடசாலைகளை உள்ளடக்கி 250 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு ஒன்றை, நுவரெலியா மாவட்டம் ரேந்தபொல ஸ்ரீ கணபதி இந்துக் கல்லூரியிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .