2020 ஜூலை 11, சனிக்கிழமை

‘பணிப்புறக்கணிப்பு ​தோல்வியடைந்துள்ளது’

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவைகள் சங்கப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பானது, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 107 டிப்போக்களில் 32 டிப்போக்களில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிர​ச்சினையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவை சங்கப் பணியாளர்கள் கடந்த 2 நாள்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தா முன்னிலையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .