Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடத்தலுக்கு உள்ளான இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி தற்போது பேசுவதற்குகூட முடியாத வகையில் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவரால் தனது குடும்பத்தினருடன் கூட சரியாக பேசமுடியாத நிலையில் உள்ள போது, அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடத்தலுக்கு உள்ளான குறித்த பெண் அதிகாரி உள்ளிட்ட அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிடஸர்லாந்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
தமது அரசாங்கத்தின் 5 வருட காலத்தில் எந்தவொரு நபரும் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago