2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமை, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து விரைவில் தெரியப்படுத்துமாறு, அரச சேவை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமைகளில் அரச அதிகாரிகள், கடமைகளுக்கு சமூகம் அளிக்காமை காரணமாக, மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது அரச முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு மேலதிகமாக செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தமது கடமைகளுக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் தொடர்பிலும் தமது அமைச்சுக்கு அறவிக்குமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--