2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

J.A. George   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மேயராக கடமையாற்றிய தன்னை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக டல்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நேற்று(02) முதல் நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது அரசியல் பழிவாங்கள் நடவடிக்கை என தெரிவித்துள்ள டல்ஜித் அலுவிஹாரே, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .