2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல்  சாதாரண கால அட்டவணைக்கு அமைய அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை அதிகாரி ஏ.எஸ்.பீ. வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார வழிமுறைகைளைப் பின்பற்றி ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் ஏற்றப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளும் கால அட்டவணையின் படி இன்று சேவையில் ஈடுபடும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் சேவையில் ஈடுபட்டதைப் போன்று, அனைத்து ரயில்களும் இன்றிலிருந்து வழமையான சேவைகளில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .