2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

பயன்படுத்திய போதை மாத்திரை தொடர்பில் விசாரணை

Nirosh   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்தக் கலவரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும், சிஐடியினர் இதுவரையில் 56 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இருந்தக் கைதிகள் பல்வேறு வகையிலானப் போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததாகவும், இப்போதை மாத்திரைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி போதைப்பொருள் தொடர்பான நிபுணர்களிடம் இதுத் தொடர்பான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தால் மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம், இக்கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .