2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பியல் நிசாந்தவுக்கு கொரோனா உறுதி

S. Shivany   / 2021 ஜனவரி 18 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள், சிறுவர் மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் மனைவி மற்றும் மகனுக்கும்  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் நாகொட பிரதேசத்திலுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சரின் அலுவலக சபையினர் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .