2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்றத்தில் மேலும் 9 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 17 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் மேலும்  9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஐவருக்கும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், பாராளுமன்றத்துக்கு வெளியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸார் மூவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 943 பேருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனையிலேயே மேற்குறித்த 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .