2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

புலனாய்வு உறுப்பினர்கள் இருவருக்கு மறியல்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான மனுவின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடற்படையின் புலனாய்வு உறுப்பினர்களான அருண துஷார மென்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகிய இருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 8 மற்றும் 9 ஆவது பிரதிவாதிகளாக இவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .