2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானம்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ்களுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில், இதுவரை காலமும் 6 ரூபாவாக  அறவிடப்பட்டிருந்த பஸ் கட்டணம் 7 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும்  அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன குறிப்பிட்டார்.

அண்மையில் எரிபொருள்களுக்கான விலை உயர்வடைந்திருந்ததாகவும், இதன் காரணமாகவே மேற்படி பஸ் கட்டனத்தை அதிகரிக்கத் தீர்மானித்திருப்பதாகவும்அவர் மேலும் கூறினார்.

  Comments - 0

  • xlntgson Wednesday, 02 June 2010 09:21 PM

    கட்டணத்தை உயர்த்துவதற்கான கரிசனை சிறந்தசேவை வழங்குவதிலும் இருக்கவேண்டும். 'நகரங்களுக்கு இடையேயான நிறுத்தமற்றசேவை' கூட எங்கு பார்த்தாலும் நின்று போகும்! குளிரூட்டி என்று பொய்யான பெயர்பலகை தாங்கி! உண்மையில் கட்டணத்தை இரட்டிப்பாக பெறவேண்டும் என்கிற எண்ணத்தை தவிர சுக போக சேவை வழங்குவது எண்ணத்திலும் இல்லை. இதில் நின்றுகொண்டு போகவும் இடமில்லை ஆனால் அடுத்த நிறுத்தத்தில் இறங்க ஒருவர் இருக்கின்றார் என்று பொய்கூறி ஆட்களை திணித்துக்கொள்ளும் அவலம், இதெல்லாம் எவ்வளவோ முறையிட்டும், இலஞ்சம் தாண்டவம் ஆடுகிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X