2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பிணைமுறி ஊழல் மோசடி; தவறு செய்தவர் சிறைச் செல்லவேண்டும்

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்களின்போது ஊழல் மோசடிகள் ஈடுப்பட்டவர் எவரானாலும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதே எனது கொள்கை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பிணைமுறி அறிக்கை பற்றிய நாடாளுமன்ற விவாதம், "தமிழ் மொழி பெயர்ப்பு" இல்லை என சுமந்திரன் எம்.பி ஆட்சேபனை கிளப்பியதால் நின்று போனது. உங்கள் அமைச்சு மொழிபெயர்க்கிறதா என ஊடகவியலாளர்கள் தன்னிடம் கேள்வியெழுப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை மொழி பெயர்க்க எமக்கு நீதிமன்ற உத்தரவு வரவில்லை.

உண்மையில் சிங்களத்திலும்கூட, இவ்வறிக்கையின் சில பகுதிகளை மொழி பெயர்க்க வேண்டும். ஆனால் "விசேட அவசர தேவை" கருதி மொழிபெயர்ப்பு இல்லாமலேயே விவாதிக்கலாம். அதுபற்றி நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
அவசியமானால் ஒன்றிணைந்த எதிரணி தலைவர், தினேஷ் குணவர்தன எம்.பியை, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதுதொடர்பான பிரேரணையை கொண்டு வர சொல்லுங்கள். நான் ஆதரிக்கிறேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X