2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’புதிய அரசமைப்பே தமிழர்களுக்கான தீர்வு’

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, புதிய அரசமைப்பின் ஊடாகவே உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில், ​பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, காலியில் இடம்பெற்​றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டி முறைமையிலான தீர்வொன்றைக் கோரவில்லை என்றும் தனி நாடு என்ற எதிர்ப்பார்ப்பொன்று, தமிழ் மக்களிடம் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை, ஒரே பாதைக்குள் கொண்டுவர வேண்டுமாயின், அதற்கு புதிய அரசமைப்பொன்று அவசியமொன்றும் வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, சிறுபான்மையின மக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காமை காரணமாகவே, யுத்தமொன்றை இந்த நாடு எதிர்நோக்க வேண்டியிருந்ததென்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டின் அமுலில் உள்ள மாகாண சபைகள் முறைமையில் சிறு மாற்றத்தைக் கொண்டுவருவதாயின், அதனை ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனரென்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .