Editorial / 2018 ஜனவரி 04 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி, பேஸ்புக்கின் ஊடாக, 2018ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், இரத்தினபுரி, எலபான மில்லவிட்டவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே, குறித்த இளைஞனை, சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், இலட்சினையைப் பயன்படுத்தி, புத்தாண்டு வாழ்த்தைத் தயாரித்த அந்தச் சந்தேகநபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, புத்திக சிறிவர்தனவின் ஆலோசனையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
7 minute ago
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
1 hours ago
1 hours ago