2021 மார்ச் 03, புதன்கிழமை

பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது

J.A. George   / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .