2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பெண் கைதிகள் கூரைமீதேறி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் சிலர், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில பெண் கைதிகள், கூரை மீது ஏறாமல் தரையில் இருந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்தே குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .