2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பொலிவூட் நடிகர் விவேக் ஒபராய் திங்கட்கிழமை வவுனியா விஜயம்

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள இந்திய பொலிவூட் நடிகர் விவேக் ஒபராய் திங்கட்கிழமை வவுனியாவுக்குச் சென்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுள்ளார். இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனையடுத்து நெடுங்கேணி மாறஇலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்து அப்பாடசாலையின் புனரமைப்பு நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.

இவரது வன்னி விஜயம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--