2020 மார்ச் 30, திங்கட்கிழமை

போலித் தகவல்களைப் பரப்பிய அதிகாரிக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, போலித் தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலையின் அதிகாரியொருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .