A.K.M. Ramzy / 2020 நவம்பர் 25 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதே வேளை, மேல் மாகாணத்திலிருந்து மத்திய மலைநாட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விடுத்த அறிவித்தலை மீறி சிலர் அந்த பகுதிகளுக்குச் சென்றமையினாலேயே மத்திய மாகாணத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கொழும்பிலிருந்து மத்திய மலைநாட்டை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அந்த அறிவித்தலை மீறிச் சென்ற நபர் ஒருவரால் மஸ்கெலியாவில் தொற்று பரவல் ஏற்பட்டது.இதே போன்று கொட்டாஞ்சேனையிலிருந்து சென்ற நபரொருவராலேயே நுவரெலியாவிலும் தொற்று இனங்காணப்பட்டது.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025