R.Maheshwary / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாதுக்க அபிவிருத்தி குழுவின் தவிசாளருமான ஜகத் குமாரவின் மீது, அழுகிய முட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினருக்கும் சீதாவக்க பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அபிவிருத்திக் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன்,கடும் பாதுகாப்புக்கு மத்தியில், பாராளுமன்ற உறுப்பினர் அவரது வாகனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது வீதியில் காத்திருந்த சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கூச்சலிட்டு அழுகிய முட்டையால் ஜகத்குமார பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
20 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
1 hours ago