2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மத்ரஸாக்கள் திறப்பு; விரைவில் முடிவு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 22 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர், நிலைமைகளை ஆராய்ந்து, ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர்,சகல அரபுக்கல்லூரிகளையும்  திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படுமென, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்,ஏ.பி.எம். ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார். நேற்று மாலை 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை

கருத்திற் கொண்டு, அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலந்துரையாடலில் ஈடுபட்டது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .