2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு

J.A. George   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின் தடை உள்ளிட்ட காரணங்களால் வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இந்த காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த கலந்துரையாடலில் அவதான செலுத்தப்பட்டதாக  மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (30) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .