2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை

J.A. George   / 2021 மார்ச் 09 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணெண்ணெய்க்கான மானியங்களை எவ்வித முறைகேடுகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நேரடியாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்று (08) முதல்தடவையாக கூடிய போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .