2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மருந்து விநியோகப் பிரிவிலும் மட்டுப்பாடு

R.Maheshwary   / 2020 நவம்பர் 24 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார திணைக்களத்தின் மருந்து விநியோக அலுவலகத்துக்குள் நுழைவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த திணைக்கள அலுவலக அதிகாரிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் அறிக்கையின் பின்னணியிலேயே இந்த மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடுபூராகவுமுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் பிரிவின் சகலருக்கும் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, மருந்து மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள நாளொன்றுக்கு 50க்கும் அதிகமான வாகனங்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்வதால், இதற்கும் மட்டுப்பாடு விதிக்க தீர்மானித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .