2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு

S. Shivany   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு 120 கைதிகளை  மாற்றிய  செயற்பாடானது, கொவிட் 19 விதிமுறைகளை மீறிய செயலென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனாலேயே சிறைச்சாலைக்குள் கொவிட் கொத்தணி உருவானது என்றும் சபையில்  தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த இன்றைய குழுநிலை விவாதத்தின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சிறைச்சாலை சம்பவம் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆட்சியின்போது சிறைச்சாலையில் ஓர் மலசலகூடத்தைகூட அமைக்க முடியாதவர்கள் இன்று நாட்டில் மனித படுகாலை பற்றி பேசுகின்றனர். கடந்த ஆட்சியில் அவர்கள் நீதிமன்றங்களை அமைத்து பலரை சிறைக்குள் தள்ளியதையே செய்தனர் என்றார்.

இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒரு பாடசாலை அமைக்கப்பட்டால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுவதற்கு சமனாகும் என காந்தி கூறியிருக்கிறார். அந்த வகையில் நாம் எமது ஆட்சியில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக உருவாக்கினோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .