Editorial / 2018 மார்ச் 26 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹாசோன் பலக்காயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினரை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டு, குசலம் விசாரித்துள்ளனர்.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இரண்டு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களையே, கடந்த சனிக்கிழமை சென்ற குழுவினர், குசலம் விசாரித்துள்ளனர்.
இரு இனங்களுக்கிடையில், குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான சமூக வலைத்தளங்களில் வீடியோ அடங்கிய காட்சிகளை தரவேற்றம் செய்து, பிரசாரங்களில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மஹாசோன் பலக்காயவின் தலைவரான கண்டி-கெங்கல்லையை சேர்ந்த அமித் வீரசிங்க என்பவரும், அவருக்கு உதவி ஒத்தாசைகளை புரிந்தனர் என்றக் சந்தேகத்தில் ஏனைய ஒன்பது பேரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால், கடந்த 8 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், தங்களுடைய வதிவிட நிர்வாகத்தின் கீழுள்ள, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஏதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
47 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago