Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்ட நீதிமன்றங்கள் நல்லாட்சியில் சுயாதீனமாகச் செயற்படுகின்றமை, தொடர்ந்து கிடைக்கப் பெறும் தீர்ப்புகள் ஊடாக உறுதிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களில் நீதிமன்றத்தின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அதிகளவான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், நியாயமானத் தீர்ப்பை பெற்றவர்களுள் தானும் ஒருவரெனத் தெரிவித்துள்ளார்.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பை சுமத்திவிட்டு, தாக்குதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் கையை கழுவி விட முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026