2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவரின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில், இச்சந்தேகநபர்கள் இருவரையும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .