Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை(06), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, இது தொடர்பான செய்திகளை ஊடகங்களினூடாக தானும் அறிந்து கொண்டதாகவும், எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
மேலும், இந்த இரகசிய சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் எனவும், அவர்களே ஜனாதிபதியின் இவ்வாறான சந்திப்புக்கள் குறித்து அறிந்து வைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்னவிடம் இது குறித்து வினவியபோது, “இது தொடர்பான முழுமையான எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது. ஊடகங்களில் அவ்வாறான செய்திகள் வெளியாகியிருப்பதை நான் இதுவரையில் அறிந்துகொள்ளவில்லை” எனவும் பதிலளித்தார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பான இரகசிய சந்திப்பு தொடர்பில், முறையான குறித்த ஆவணம் வெளிவரும் வரையில், இரகசியம் பேணப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
7 hours ago
27 Feb 2026
26 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
27 Feb 2026
26 Feb 2026