2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ரஞ்சனுக்கு விடுமுறை விண்ணப்பம்

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, மூன்றுமாதகால விடுமுறை கோரி, விடுமுறை விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு அவரை அழைத்துவராவிடின், விடுமுறை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு, எதிரணி தீர்மானித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த விடுமுறை விண்ணப்பத்தை, எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி, சபைக்கு இன்று (09) சமர்ப்பிப்பார். 
பாராளுமன்ற உறுப்பினர், மூன்று மாதங்கள் சபையமர்வில் பங்கேற்கவில்லை எனில், அவருக்கான விடுமுறை விண்ணப்பத்தை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துஇ அனுமதியையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .