2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ரணிலிடம் குறுக்கு விசாரணை கேட்கிறார் அனுர

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குறுக்கு விசா​ரணை செய்ய அனுமதிக்குமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திசாநாயக்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (24) குறித்த ஆணைக்குழுவவில் ஆஜரான போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது, ஊழல் ஒழிப்பு குழுவை நியமிப்பது தொடர்பில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரமானது, குழப்பமானதொன்றெனவும் அநுரகுமார  ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு தமது பங்களிப்பு எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--