2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

றமழான் மாதம் பற்றி முஸ்லிம்களுக்கு அறிவித்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

றமழான் மாதம் முதல், மறுஅறிவித்தல் வரை இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைவாக இமாம்கள் மற்றும் முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமகனும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாமென்று முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் வக்ப் சபைப் பணிப்பாளருமான ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

பணிப்பாளர் அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜும்ஆ தொழுகை, ஐவேளைத் தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும் இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும் பள்ளிவாயிலின் உள்ளேயோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தினுள்ளோ கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் மென்றும் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் அவர் குறிப்பிடுகையில்;

பள்ளிவாசல்  ஜமாஆத்தினருக்கு  இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பி னராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்ட ல்களையும் பற்றி ஜமாஆத்தினருக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறும் மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது என்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .